மஸ்ஜிதுகளை கட்டுவது, பாடசாலைகளை நிர்மாணிப்பது, புலமை பரிசில்களை வழங்குவது, ஆய்வு கூடங்களை உருவாக் குவது, சனசமூக நிலையங்களை ஸ்தாபிப்பது, புத்தக சாலை களை நிறுவுவது, அனாதை இல்லங்களை ஏற்படுத்துவது, நீர்பாசன திட்டங்களை மேற்கொள்வது, அடிப்படை வசதிகளை மேற் கொள்வது போன்ற சமூகப் பணிகளை ஆற்றுவதுடன் ஏனையோர்களை இப்பணிக்கு தூண்டுவதற்கு முன்னுதாரண மாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் தனக்காகவும் பிறருக்காகவும் செயற் படுத்து கின்ற இப்பணிக்கான கூலிகள் இம்மையிலிருந்து மறுமை வரை வந்தடைந்து கொண்டிருக்கும். அவனது இவ்வுழைப்பில் சாலிஹான பிள்ளையும் உருவாக்கிட மறந்து விடவும் கூடாது. அவனுக்காக பிரார்த்திக்கக் கூடிய அவன் பெயரை சமூகத் திற்கு அடையாளப்படுத்தக்கூடிய நல்ல பிள்ளையாக வளர்த்து விட்டுச் செல்ல வேண்டும்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
(ஒருநாள்) நடுப்பகல் நேரத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது செருப்பணியாத அரை குறை ஆடையணிந்த நிர்வாணிகளான வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் கழுத்துகளில் வாட்களை தொங்க விட்டவர்களாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும் பான்மையினர் முழர் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்கள். இல்லை, அவர்கள் எல்லோரும் முழர் கூட்டத் தார்கள்தான். அவர்களின் வறுமையைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது. உடனே நபி(ஸல்)அவர்கள் (ஒருவித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் நுழைந்து விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவு விட பிலால் (ரலி) அவர்கள் பாங்கு கூறி இகாமத்தும் கூறினார்.நபி (ஸல்) தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழத்தினார்கள். (அவ்வுரையில்)..
மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை படைத்து அந்த ஆத்மாவிலிருந்து அதன் ஜோடியையும் படைத்து பின்னர் அவ்விருவரிலிருந்தே அதிகமான ஆண்களையும் பெண்களை யும் வெளிப்படுத்தி பரவச் செய்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எவன் மூலம் உதவி பெறுவீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் இரத்த பந்த உறவினர்களை ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கின்றான்.(4:1)
இறைவிசுவாசிகளே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆத்மாவும் நாளை மறுமைக்காக எதனை முற் படுத்தி வைத்தது என்பதை கவனிக்கட்டும்.(59:18) (என்ற வசனங்களை ஓதிக் காட்டி முழர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி னார்கள். அப்போது பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.
உடனே நபித் தோழர்கள் தம்மிடமிருந்த தீனார், திர்ஹம், ஆடை, கோதுமையில் ஒருஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்ற அளவிலும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரி தோழர்களில் ஒருவர் ஒரு பை நிறைய பொருட்களை கொண்டு வந்தார். அதை தூக்க முடியாது அவரது கை திணறியது. ஏன், அவரால் அதை தூக்கவே முடியவில்லை.
தொடர்ந்தும் மக்கள் தங்களின் தர்மப் பொருட்களுடன் வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் பொன் னைப் போன்று மின்னிக் கொண்டிருந்ததையும் நான் கண்டேன். அப்போது நபி(ஸல்)அவர்கள் யார் இஸ்லாத்தில் ஓரு அழகிய நடை முறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன் படி செயற்படு பவர்களின் நன்மையும் உண்டு. அதற்காக அவர்களது நன்மை யில் எதுவும் குறைந்து விடாது.
அவ்வாறே யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய பாவமும் அவருக் குப்பின் அதன்படி செயற்படுபவர்களின் பாவமும் அதன் படி செயற் பட்டவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம.1017)
ஒரு முஸ்லிம் சிறந்த வழிகாட்டியாக இருந்து சுயநலமின்றி பொது நலன்காக்கும் வகையில் வாழவேண்டும் என்ற இலட்சிய மனப்பான்மையை அல்லாஹ்வுடைய தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
எவர் இஸ்லாத்தில் ஓரு அழகிய பணியை செய்து மற்றவருக்கும் தூண்டுதலாக இருக்கிறாரோ அவருக்கான கூலி கிடைப்பது போல் அந்த அழகிய பணியினை மேற்கொண்ட வரின் நன்மையும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என்று என்று நபியவர்கள் ஆர்வமூட்டினார்கள். எனவே இந்த வட்டத்தை விட்டும் முஸ்லிம் ஒதுங்கி வாழக் கூடாது.
பின்தொடரும் நல்லறங்கள்.
PART.03
எம்.எஸ்.எம்.இம்தியாஸ் யூசுப் ஸலபி
மரணித்தவருக்காகப் பயனளிக்கும் காரியங்கள்
தாய் தந்தை மற்றும் குடும்ப அங்கத்தவர் ஒருவர் மரணித்த பின் அவரை குளிப்பாட்டி கபன் செய்து தொழுகை நடாத்தி நல்லடக்கம் வரை மேற் கொள்கின்ற காரியங்களுடன் எமது கடமைகள் முடி வடைந்து விடுவதில்லை.
மரணித்தவருக்காக செய்ய வேண்டிய மேலும் சில கடமைகளும் உண்டு. அவைகளைப்பற்றி இனி கவனிப்போம்.
கடனை நிறைவேற்றுதல்
பெற்றோர் மற்றும் சொந்தக்காரர் கடனாளியாக மரணித் துள்ளாரா? அது பற்றி ஏதும் அறிவித்து விட்டு சென்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். கடனாளிகளாக இருப்பின் முதலில் கடனை அடைப்பதற்கு அவசரம் காட்ட வேண்டும். கடனை ஒப்படைக்காது மரணிப்பது பாவமாகும்.
مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ
(மரணித்தவரின் சொத்துக்களை பங்கு வைக்கு முன்) அவருடைய கடனையும் வஸீயத்தையும் நிiவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். (பார்க்க 4:11)
அல்லாஹ்வுடைய தூதர் ஜனாஸா தொழுகையை நடத்துமுன் அந்த ஜனாஸா கடனாளியாக மரணித்துள்ளதா என்பதை விசாரித்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்கள் கூறுகின்றன.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர்கள் நபி (ஸல்) அவர்களை தொழுவிக்கும்படி கூறினார்கள். இவருக்கு ஏதேனும் கடன் உண்டா என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை என கூறப்பட்டது. ஏதாவது விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கேட்டார்கள். இல்லை எனக் கூறப்படடது. அப்போது அந்த ஜனாஸாவுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தினார்கள்.
அதன் பின் இன்னுமொரு ஜனாஸா கொண்டு வரப் பட்டது. தொழுகை நடாத்தும்படி நபி(ஸல்) அவர்களை வேண்டினார்கள். இவருக்கு கடன் ஏதும் உண்டா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் எனக் கூறப்பட்டது. ஏதேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். மூன்று தீனார்களை விட்டுச் சென்றுள்ளார் என பதிலளிக்கப் பட்டதும் அந்த ஜனாஸாவுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தி னார்கள்.
அதன் பின் இன்னுமொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்களை தொழுகை நடாத்தும் படி வேண்டினார்கள். இவர் ஏதேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் இல்லை என பதிலளித்தார்கள். இவருக்கு ஏதேனும் கடன் உண்டா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் மூன்று தீனார்கள் கடன் உண்டு என பதிலளித்தார்கள். (கடனாளிக்கு தொழுகை நடாத்தாமல்) உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடாத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே (அங்கிருந்த அபூ கதாதா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் அக்கடனை பொறுப்பேற்கிறேன். இவருக்கு நீங்கள் தொழுகை நடாத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுகை நடாத்தினார்கள். (அறிவிப்பவர்: சலமதிப்னுல் அக்வா (ரழி) (நூல்: புகாரி, அஹ்மத், நஸயீ திர்மிதி).
பாவமன்னிப்பு த் தேடுதல்
எங்களுக்கு முன் மரணித்த முஸ்லிமான முஃமினான ஆண் பெண்களுக்கு பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தனைச் செய்யும் பழக்கத்தை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்.
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்களை முந்திச் சென்று ஈமான் கொண்ட சகோதரர்களுக்கும் மன்னிப்பை அருள்வாயாக (59:10)
குறிப்பாக பெற்றோருக்காக மன்னிப்புக் கோருவதற்கு மறந்து விடக்கூடாது. எம்மை பெற்றெடுத்தது முதல் ஆளாக்குகின்ற வரை எமது அசுத்தங்களை சுத்தப்படுத்தி எமக்காகவே கஷ்டப்பட்டு உழைத்தவர்கள். எமது சந்தோசங்களுக்காக தங்களுடைய சுகதுக்கங்களை துறந்தவர்கள். நாம் தூங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கண் விழித்தவர்கள். நாம் வயிறார உண்ண வேண்டும் என்பதற்காக பசியோடு நாட்களை கடத்தியவர்கள். கோழி தன் குஞ்சுகளை அரவணைப்பதைப் போல் எம்மை அரவணைத்து போஷித்தவர்கள். எனவே அவர் களுக்காக பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் அருளை வேண்டி கப்ருடைய வேதனை நரக வேதனை மற்றும் மறுமை வாழ்வின் சோதனையை விட் டும் பாதுகாத்து சுவனத்தில் சேர்த்து விடுமாறு எப்போதும் இஹ்லாசுடன் பிரார்த்திக்க வேண்டும்.
எம்மை படைத்த ரப்புக்கும் எம்மை பெற்றெடுத்த பெற் றோருக்கும் நன்றி செலுத்த மறந்துவிடக் கூடாது. பெற்றோருக் கான பிரார்த்தனை செய்யும் முறையினை அல்லாஹ் பின்வரு மாறு கற்றுத் தருகிறான்.
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இரட்சகனே! எனது பாவத்தையும் எனது பெற்றோ ரினதும் முஃமின்களினதும் பாவங்களை (மறுமை) விசாரணை யுடைய நாளில் மன்னிப்பாயாக. (14:41)
وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
என் இரட்சகனே! நான் சிறுவனாக இருந்தபோது (என் பெற் றோராகிய) அவ்விருவரும் என்னைப் பராமரித்தது போன்று அவ்விருவருக்கும் நீ கருணை புரிவாயாக எனக் கூறுவீராக. (17:24)
பெற்றோருக்காகக் நாம் கோரும் பாவமன்னிப்பினால் அவர் களுடைய அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.
(سنن ابن ماجه (2 1207
عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ '
மனிதனின் அந்தஸ்த்து சுவனத்தில் உயர்த்தப்படும். அப்போது அவன் எவ்வாறு இது கிடைத்தது என்று கேட்பான். உன் பிள்ளை உனக்காக பாவமன்னிப்புக் கோரியதால் கிடைத்த அந்தஸ்தாகும் என கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: இப்னு மாஜா)
சுவனத்தில் எமது பெற்றோரினது அந்தஸ்து உயர்வதற்காக வாழ்நாள் முழுவதும் -ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் –பிரார்த்திப் பதற்கு நாம் மறந்துவிடக்கூடாது.
தர்மம் செய்தல்:
பெற்றோரர்களுக்காக சொந்தங்களுக்காக - அவர்களுடைய பெயரால்- தர்மங்கள் செய்திடும் போது அவர்களுடைய பாவங் கள் மன்னிக்கப்படுகிறது
صحيح مسلم (3ஃ 1254)
عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوصِ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا، قَالَ: «نَعَمْ»،
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் வஸீயத் செய்யாத நிலையில் மரணித்து விட்டார். அவர், (மரணத்தரு வாயில்) பேசியிருந்தால் தர்மம் (ஸதகா) செய்யும் படி கூறியிருப்பார் என நம்புகிறேன். நான் அவருக்காக தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்கு கிடைக்குமா? எனக் கேட் டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். (நன்மை கிடைக்கும்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(صحيح مسلم (3ஃ 1254
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبِي مَاتَ وَتَرَكَ مَالًا، وَلَمْ يُوصِ، فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»
எனது தந்தை வசிய்யத் எதுவும் செய்யாமல் சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டார். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால் அவரது குற்றங்களுக்கு பரிகாரமாக அமையுமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்
سنن أبي داود (3ஃ 118)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ فَقَالَ: «نَعَمْ». قَالَ: فَإِنَّ لِي مَخْرَفًا، وَإِنِّي أُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا
ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ் வின் தூதரே! எனது தாய் மரணித்து விட்டார். என் தாய்க்காக தர்மம் செய்தால் பயனளிக்குமா எனக் கேட்டார். அப்போது அல்லாஹ் வின் தூதர்அவர்கள் ஆம் என கூறினார்கள். எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. என் தாய்க்காக அதனை தர்மம் செய்தேன் என்பதற்கு உங்களை சாட்சியாக வைக்கிறேன் என அம்மனிதர் கூறினார். அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவுத்
பொது வசதி செய்து கொடுத்தல்:-
மரணித்தவரின் பெயரால் பொது மக்களின் உபயோகத்திற்காக வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை பார்க்கிறோம். உதாரணமாக (Memorial Hall) ஞாபகார்த்த கட்டடம், பஸ் நிலையம் நிர்மானித்தல் வைத்திய உபகரணங்கள் கையளித்தல் போன்றவை குறிப்பிடலாம். இதுபோன்ற பொது சேவைகள் மூலம் சமூகம் நன்மை அடைகிறது. அல்லாஹ்வுடைய தூதர் பொதுத்திட்டங்களை அன்றே இந்த உம்மத்திற்கு அறிமுகப் படுத்தினார்கள். பின்வரும் ஹதீஸிலிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை மரணித்தவரின் பெயரால் செய்து கொடுக்க கட்டளையிடுகிறார்கள்
صحيح ابن خزيمة (4-123)
عَنْ سَعْدٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ فَقَالَ: «نَعَمْ» ، فَقُلْتُ: أَيُّ صَدَقَةٍ أَفْضَلُ؟ قَالَ: «إِسْقَاءُ الْمَاءِ»
ஸஃதுப்னு உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரே எனது தாய் மரணித்து விட்டார்கள். அவருக்காக தர்மம் செய்யட்டுமா எனக் கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆம் எனக் கூறினார்கள். தர்மத்தில் சிறந்தது எது எனக் கேட்டேன். நீர் புகட்டுதல் என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னு குஸைமா)
நோன்பு நோற்றல்:-
மரணித்தவர் உயிருடன் இருக்கும் போது ரமழான் கால நோன்பு நோற்க இயலாத நிலையில் அதற்காக பித்யா கொடுக் காதவராக மரணித்திருந்தால் அவர் சார்ப்பாக அந்நோன்பை பிள்ளைகள் கழா செய்ய வேண்டும். அவ்வாறே ஏதும் ஒரு காரணத்திற்காக நோன்பு நோற்பதாக நேர்சசை செய்திருந்து அந்நோன்பை நோற்காதவராக மரணித்திருந்தாலும் பிள்ளைகள் அந்நோன்பை நோற்க வேண்டும் عَنِ ابْنِ
عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، فَقَالَ: «أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَدَيْنُ اللهِ أَحَقُّ بِالْقَضَاءِ»
அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாதகால நோன்பு கடமை யான நிலையில் என் தாய் மரணித்துவிட்டார். அதை அவர் சார்ப்பாக நான் நிறைவேற்றலாமா? என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் தாயாருக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றத்தானே செய்வாய்? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “அவ்வாறானால் அல்லாஹ்வின் கடனை நிறை வேற்று கடன்களை நிறைவேற்ற அவன் மிகத் தகுதியானவன்” என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
صحيح البخاري ( 3 - 35)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ
நோன்பு கடமையான நிலையில் மரணித்தால் அவர் சார்பாக அவருடைய பொறுப்புத்தாரி அதனை நிறைவேற்ற வேண்டும என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல் புகாரி)
ஹஜ் மற்றும் உம்ரா செய்தல்:
உயிருடன் இருக்கும் பெற்றோர் ஹஜ் செய்ய சக்தியற்ற வர்களாக இருந்தால் அவர்கள் சார்ப்பாக பிள்ளைகள் ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாம். பிள்ளைகள் முதலில் தங்களுக்காக ஹஜ், உம்ரா செய்யவேண்டும். அதன் பின் (உயிருடன் இருக்கும் அல்லது மரணித்திருக்கும்) குடும்ப அங்கத்தினர் மற்றும் பெற்றோருக்காக செய்ய வேண்டும்.
صحيح البخاري (8- 142)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என்னுடைய சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். (ஆனால் ஹஜ்ஜு செய்யாது) மரணித்து விட்டார். எனக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உனது சகோதரிக்கு கடன் இருந்தால் அதை நீ நிறை வேற்றுவாயா? கேட்க அவர் ஆம்! நிறை வேற்றுவேன் எனக் கூறினார். அப்படியாயின் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. கடன்களை நிறைவேற்றுவதற்கு அவனே மிகத் தகுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (ஆதாரம்: புகாரி (6699)
صحيح البخاري (3 - 18)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»
ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து “எனது தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஹஜ் செய்யவில்லை மரணித்து விட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யட்டுமா?” எனக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உன் தாய்க்கு கடனிருந்தால் அதனை நீ நிறை வேற்றுவாய்தானே. அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. கடனை நிறைவேற்றுவதற்கு அவனே மிகத் தகுதியானவன்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்; புகாரி)
صحيح البخاري (3- 18)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ عَامَ حَجَّةِ الوَدَاعِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ
கஷ்ஹம் எனும் கோத்திரத்தை சேர்ந்த பெண்மணியொருவர் நபி(ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கியுள்ளான். எனது தந்தை வயது முதிர்ந்தவர். வாகனத்தில் ஏறி உட்காருவதற்கு அவருக்கு முடியாது. அவருக்காக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?” எனக் கேட்டார். அதற்கு அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: புகாரி)
سنن أبي داود (2- 162)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ، قَالَ: «مَنْ شُبْرُمَةُ؟» قَالَ: أَخٌ لِي - أَوْ قَرِيبٌ لِي - قَالَ: «حَجَجْتَ عَنْ نَفْسِكَ؟» قَالَ: لَا، قَالَ: «حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ»
ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஷுப்ருமா வுக்காக ஹஜ் செய்ய தல்பியா கூறியுள்ளேன் எனறு கூறினார். யார் அந்த ஷுப்ரமா? என நபியவர்கள் கேட்டார்கள். அவர் எனது சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் என்றார். “உனக்காக நீ ஹஜ் செய்துள்ளாயா?” என நபியவர்கள் கேட்ட போது அவர் இல்லை என்றார். (முதலில்) உனக்காக ஹஜ் செய். பிறகு ஷுப்ருமாவுக்கு ஹஜ் செய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: அபூதாவுத்;)
நேர்ச்சையை நிறைவேற்றல்:-
அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் அனுமதித்த விடயங்களில் ஒருவர் நேரச்சை செய்து அதனை நிறை வேற்றமுன் மரணித்தால் மட்டுமே அந்நேரச்சையை நிறைவேற்ற வேண்டும். கப்றுக்கு போர்வை போர்த்துவேன், எண்ணெய் ஊற்றுவேன், கந்தூரி கொடுப்பேன், தர்காவை எழு முறை சுற்றி வருவேன் என்று நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்றுவது கடமையல்ல. அல்லாஹ்வுக்கும் அவனது தூதரின் வழிமுறைக்கும் மாற்றமான முறையில் இந்நேர்ச்சைகள் இருப்பதனால் நிறை வேற்ற வேண்டியதில்லை.
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَاقْضِهِ عَنْهَا»،
எனது தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது. அதை நிறைவேற்ற முன், மரணித்து விட்டார்கள். (என்ன செய்யலாம் என்று) ஸஃது இப்னு உபதா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் பத்வா கேட்டார்கள். அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: புகாரி (6698)
سنن أبي داود 3- 237)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً رَكِبَتِ الْبَحْرَ فَنَذَرَتْ إِنْ نَجَّاهَا اللَّهُ أَنْ تَصُومَ شَهْرًا، فَنَجَّاهَا اللَّهُ، فَلَمْ تَصُمْ حَتَّى مَاتَتْ فَجَاءَتْ، ابْنَتُهَا أَوْ أُخْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا»
ஒரு பெண் கடலில் பயணிக்கும் போது அல்லாஹ் என்னை காப்பாற்றினால் ஒரு மாதக் காலம் நோன்பு நோற்பேன் என நேர்ச்சை செய்தார். அல்லாஹ் அப்பயணத்தில் அப்பெண்ணை காப்பாற்றினான. மரணிக்கும் வரை அந்நோன்பை அவர் நோற்க வில்லை. இந்நிலையில் அப்பெண்ணுடைய மகள் அல்லது சகோதரி நபி(ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டார். அப்போது நபியவர்கள் அப்பெண்சார்ப்பாக அந்நோன்பை நோற்குமாறு ஏவினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (ஆதாரம் அபூதாவுத்)
குடும்ப உறவை பேணிக் கொள்ளல்.
குடும்பத்துடனான உறவையும் மவ்தாக்கி விடக்கூடாது. அவ்வாறே தாய் தந்தை மரணித்து விட்டால் அவர்களுடைய சொந்த பந்த உறவுகளை அறுத்து விடக்கூடாது. பெற்றோருடைய நண்பர்களைக் கண்டால் தங்களது பெற்றோருக்கு செலுத்தும் மரியாதையை அவர்களுக்கும் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்.
صحيح مسلم (4/ 1979)
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا مِنَ الْأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ، فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللهِ، وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ. وَأَعْطَاهُ عِمَامَةً، كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ: فَقُلْنَا لَهُ: أَصْلَحَكَ اللهُ إِنَّهُمُ الْأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ، فَقَالَ عَبْدُ اللهِ: إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ»
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மக்கா செல்லும் வழியில் கிராமவாசிகளில் ஒருவரை சந்தித்த போது அவருக்கு ஸலாம் கூறி அவரைத் தாக் பயணம் செய்து வந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும் அவருக்கு தமது தலைமீதிருந்த தலை பாகையை(கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம் அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும். இவர்கள் கிராம வாசிகள். இவர்களுக்கு சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள் என்று கூறினோம். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரிய வராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நல்லறங்களில் மிகவும் சிறந்தது ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் எனக் கூறினார்கள். (நூல்- முஸ்லிம்)
صحيح البخاري (5/ 38)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: مَا غِرْتُ [ص:39] عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا، وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً، ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ، فَرُبَّمَا قُلْتُ لَهُ: كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ، فَيَقُولُ «إِنَّهَا كَانَتْ، وَكَانَتْ، وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ
நபி(ஸல்) அவர்கள் (மரணித்த தனது மனைவியான) கதீஜா (ரலி) அவரகளை அதிகம் நினைவு கூருவோராக இருந்தார்கள். சில சமயங்களில் ஆடு அறுத்தால் அதனை பல துண்டுகளாக்கி கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பிவைப்பார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் (நூல்:புகாரி)
கத்தம் பாத்திஹா
சகோதரர்களே! இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மரணித்துப் போன எமது பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தி னர்கள் மீது நாம் கவனம் செலுத்தியுள்ளோமா என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.
சஹாபாக்கள் நபியவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை எமது முஸ்லிம் குடும்பங்கள் கற்றுக் கொண்டுள்ளனவா என்பதையும் கவனித்துப் பாருங்கள்.
மையத்து வீட்டுகாரர்கள் பெரும் கவலையிலும் சோகத்திலும் மூழ்கி இருக்கும் போது கத்தம் பாதிஹாவுக்காக ஆயிரக்கணக்கில் கடன் பட்டு வாய்க்கு ருசியாக பண்டங்களையும் சாப்பாடு களையும் சமைத்துப் போடுகிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது அங்கு வரக் கூடியவர்கள் துயரத்தில் இருக்கும் மையத்து வீட்டுக்காரர்களுக்கு சமைத்து கொடுத்து ஆறுதல் சொல்லுவதை விட்டு அங்குள்ளவர்களிடம் சாப்படு எடுத்து சாப்பிடுவது எந்த வகையில் நியாயம்? குடிசை தீ பற்றி எரியும் போது சுருட்டு பற்ற வைக்க நெருப்பு கேட்ட கதை மாதிரி இருக்கிறது. இந்த விஷயத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் அல்லத மக்கள் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்.
سنن ابن ماجه (1/ 514)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ، أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ»
ஜஃபர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவித்தபோது ஜஃபரின் வீட்டாருக்கு அவர்களை கவலைக்குள்ளாக்கும் செய்தி வந்துள்ளது. எனவே, ஜஃபரின் குடும்பத்தாருக்கு உணவு சமைத்துக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரலி) நூல்: அபூதாவுத் இப்னுமாஜா)
எமது அண்டை வீட்டார் மரணித்த போது ஒரு நாள்வது இப்படியான ஒரு சுன்னத்தான காரியத்தை செய்து ஆறுதல் சொல்லி யிருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.
மரணித்தவருக்காக கத்தம் பாதிஹா ஓதி ராதிபு வைத்து மவ்லிது ஓதி சாப்பாடு போடுவதும் 3, 7, 15, 20, 30, 40, 60 கத்தம் கொடுப்பதும் வருடத்திற்கு ஒரு கத்தம் கொடுப்பதும் சுன்னத் என்றால் அந்த மேலான சுன்னத்தை நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு காண்பிக்காமல் போவார்களா?
இந்த வானத்திற்கு கீழால் பூமிக்கு மேலால் அல்லாஹ்வின் தீனை நடைமுறைப்படுத்தி வாழ்ந்த சிறந்த சமுதாயம் சஹாபா சமுதாயம் தான். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப் பட்ட அந்த சமுதாயத்தில் - நபி (ஸல்) அவர்கள் ஹயாத்துடன் இருக்கும் போது- கத்தம் பாதிஹாவை நடை முறை படுத்தி இருக்க வில்லை என்றால் அவர்களுக்கு பின்னால் வந்த நீங்கள் ஏன் அஞ்சவேண்டும். சிரமப்பட வேண்டும்.
சகோதரர்களே! நரகத்தை விட்டும் தூரமாக்கி சுவனத்தின் பால் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டியாக வந்தவர் தான் அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்களை உண்மையாக ஈமான் கொண்ட மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறை போதுமானது.
எனவே உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீண்விரயமாக் காது பெற்றோர் மற்றும் உறவினர்களின் பெயரில் தர்மங்கள் செய்யுங்கள். சமூகத்திற்கும் நாட்டுக்கும் பயனுள்ள காரியங்களை செய்ய முன் வாருங்கள். எந்த சந்தேகங்களும் இல்லாது மறுமை வரை அவர்களுக்கு நன்மை போய்கொண்டே இருக்கும்.
குறிப்பு: சகோதரர்களே மரணித்தவரின் பெயரால் யாஸீன் சூரா அல்லது மன்ஸில்கள் வினியோகிக்கப்படுகிறது. தூசு தட்டுதற்கு ஆளில்லாமல் அவை பள்ளிவாசல்களில் நிறைந்து கிடக்கிறது. இதை விட ஓதுவதற்கும் படிப்பதற்கும் வசதியில்லாத பிள்ளைகளுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் பாடசாலை உபகரணங்களை வாங்கிக் கொடுங்கள். அவை மிகவும் பிரயோசனமாக இருக்கும்.