Articles

பின்தொடரும் நல்லறங்கள்





] தமிழ் – Tamil –[ تاميلي





M.S.M. இம்தியாஸ் யூசுப்





2013 - 1434





الصالحات الجاريات بعد الموت





« باللغة التاميلية »





إمتياز يوسف السلفي





2013 - 1434





பின்தொடரும் நல்லறங்கள்





எம்.எஸ்.எம்.இம்தியாஸ் யூசுப் ஸலபி





الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ





உங்களில் அழகிய செயலுடையவர் யார் என்று உங்களைச் சோதிப்பதற்காக அவனே மரணத்தையும் வாழ்வையும் படைத் தான். அவன் யாவற்றையும் மிகைத்தவன், ஞானமிக்கவன். (67:2)





இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்றது. மறுஉலகவாழ்வே நிரந்தரமானது. மறுமை வாழ்வின் வெற்றி தோல்வியை தீர் மானிக்கும் களமாகவே இவ்வுலக வாழ்வு அமைக்கப் பட்டுள்ளது. எனவே இது ஒரு சோதனை களம்.





சுவனத்தில் வாழ்வேண்டிய நாம் ஷைத்தானின் சூழ்ச்சி காரணமாக சுவனத்திலிருந்து இறக்கப்பட்டு பூமியில் வாழ வைக்கப்பட்டோம்.





நபி ஆதம் (அலை) ஹவ்வா (அலை) ஆகிய இருவரை யும் சுவனத்திலிருந்து அல்லாஹ் இறக்கும் போது





قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ





“நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். என்னுடைய நேர்வழியை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்று கூறினோம் (2:38)





قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ





மேலும் “உங்களுக்கு பூமியில்ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வாழ்க்கை வசதியும் உள்ளன. அதிலேயே வாழ்வீர்கள் அதிலேயே மரணிப்பீரகள். அதிலிருந்தே (மீண்டும்) எழுப்பப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறி னான்.(7:24.25)





ஆதம் (அலை) ஹவ்வா (அலை) பூமிக்கு இறக்கப்படும் போது இவ்வுலக வாழ்வில் வெற்றியடைவதற்கு இரண்டு விடயங்கள் குறித்து மனித சமூகத்திற்கு அல்லாஹ் கட்டளை யிட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.





முதலாவது, மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் அமல்கள் புரியவேண்டும் என்ற நேர்வழியை காட்டும் பொறுப்பு தன்னு டையது என்றும் எவர் அந்நேர் வழியை பின்பற்றுவாரோ அவர் கவலைப்படவோ துக்கப் படவோ மாட்டார் என்றும் அல்லாஹ் உத்தரவாத மளித்தான்.





இரண்டாவது, இந்த பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மரணித்தபின் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள். பின் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் எச்சரித் துள்ளான்.





அருளும் அன்பும் உடைய ரஹ்மான் மனித சமுதாயம் நேர்வழியை விட்டு சறுகுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு நேர்வழியை காட்டுவதற்காக நபிமார்களை அனுப்பி வஹியை அருளி தனது உத்தரவாதத்தை உறுதிப் படுத்தினான். இறுதி யாக நபி முஹம்மத் (ஸல்)அவர்களை உலக மக்களுக்கு இறு தித் தூதராக அனுப்பி இறுதி வேதமான அல்குர்ஆனை இறக்கி தன்னுடைய வழி காட்டல்களை பூரணப் படுத்தினான். இந்த அடிப்படையை இங்கு கவனமாக புரிந்து கொண்டு மேலே யுள்ள (67:2)வசனத்தை விளங்க வேண்டும்.





இவ்வசனம் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அழகிய செயலை செய்பவர் யார் என்ற பரிசோதனைக்கு ஒவ்வொருவரும் முகம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை விளக்கப் படுத் துகிறது.





அழகிய செயல் என்றால் என்ன அதனை எப்படி தீர்மானிப் பது? என்பதை விளங்கிக் கொண்டால் இந்த சோதனையில் வெற்றி பெறுவது இலகுவாகிவிடும்.





இமாம் புலைல் இப்னு இயாழ்(ரஹ்) இவ்வசனத்திற்கு விளக்கம் கூறும் போது அல்லாஹ்வுக்காக இஹ்லாஸூடன் நேர்த்தியாக அமல் புரிவதாகும். நேர்த்தியாக எனும் போது நபி(ஸல்)அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் அமல் புரிவதாகும் என குறிப் பிடுகிறார்கள். (நூல்:தப்ஸீர் பகவி)





எனவே அழகிய செயல் என்றால் சாலிஹான அமல்கள் என பொருளாகும். வாழ்வையும் சாலிஹான அமல்களையும் அடையாளப்படுத்தி காட்டுவதற்காகவே முன் மாதரி மிக்க தூதராக நபி முஹம்மத்(ஸல்) அவர் களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.





உங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக் கின்றது.(33:21)





அல்லாஹ்வையும் மறுமையயும் ஈமான் கொண்டு இவ் வுலக வாழ்வின் சோதனைகளில் வெற்றிப் பெற வேண்டு மானால் நபி(ஸல்)அவர்களை சகல விடயங்களிலும் முன் மாதிரியாக கொண்டு செயல்பட்டே ஆகவேண்டும். எனவே நாம் செய்கின்ற நல்லமல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரு நிபந்தனைகள் உண்டு.





முதலாவது, இஹ்லாஸ் (உளத்தூய்மை)ஆகும். அதாவது மனிதர்களின் புகழையோ முகஸ்துதியையோ எதிர்பார்க்காது அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர் பார்த்து அவன் வழங்கும் நன்மையில் ஆதரவு வைத்து தூய்மையான எண்ணத்துடன் காரியமாற்றுவதாகும்.





இரண்டாவது, நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலை பின் பற்றுதலாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய ஒரு அமலை எவ்வித கூட்டல் குறைவும் திரிபுமின்றி செய்வதோடு அவர்கள் செய்து காட்டாத எந்த வொரு அமலையும் செய்யாது விட்டு விடுதலாகும்.





இவ்விரு நிபந்தனைகளும் ஒருங்கே அமையும் போது தான் ஒரு விசுவாசியின் அமல், சாலிஹான அமலாக அங்கீகரிக் கப்படும். அந்த அமல் இம்மையிலும் மறுமையிலும் பயனுள்ள தாக அமைக்கப்படு கிறது.





அல்லாஹ் கூறுகிறான்:





فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ





உங்களில் ஆணாயினும். பெண்ணாயினும் நற்செயல் புரிவோரின் எச் செயலையும் நிச்சயமாக நான் வீணாக்க மாட்டேன் என அவர்களின் இரட்சகன் (அல்லாஹ்) அவர் களுக்குப் பதிலளித்தான். (3:195)





அல்லாஹ் கூறுகிறான்:





مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ





ஆணோ பெண்ணோ, நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் அவர்களுக்கு வழங்குவோம். (16:97)





சாலிஹானஅமல்கள் புரிகின்ற விசுவாசிகளின் இம்மை மறுமை வாழ்வை நல்வாழ்வாக ஆக்கிடும் பொறுப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அவர்களது கூலிகள் பாது காப்பானதாகவும் இருக்கும் என்றும் வாக்குறுதி யளிக்கிறான். அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யாவதில்லை. அவர்கள் செய்த நல்லமல்களை முன்னிறுத்தி அதன் பொருட்டால் உதவியையோ தேவையையோ கேட்டு பிரார்த் தித்தாலும் கூட அப்பிரார்த்தனையை ஏற்று தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் அல்லாஹ் தயாராக இருக்கிறான். (இது வஸீலா எனவும் கூறப்படும்).





நிச்சயமாக அல்லாஹ்வுக்காக வாழ்ந்தவர்கள் அவனுக்காக வே பணியாற்றியவர்கள் அவன் தூதர் காட்டிய வழியில் நல்லறங்கள் புரிந்தவர்களின் வாழ்வின் இறுதிக் கட்ட நேரத்தில் மலக்குகளை அல்லாஹ் அனுப்பி அவர்களுக்கு சுபசோபனம் சொல்கிறான்.





يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي





அமைதி பெற்ற ஆத்மாவே நீ உன் இரட்சகனிடம் திருப்தி யடைந்த நிலையிலும் திருப்திகொள்ளப்பட்ட நிலையிலும் செல்வாயாக. என் அடியார்களில் நுழைந்து கொள்வாயாக. மேலும் எனது சுவனத்திலும் நுழைந்து கொள்வாயாக. (89:27.28)





إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ





நிச்சயமாக எவர்கள் எங்கள் இரட்சகன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் (அதில்) உறுதியாக இருக்கின்றார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்கி நீங்கள் அச்சப்படவும் வேண்டாம் துக்கப்படவும் வேண்டாம் உங்களுக்கு வாக்களிக் கப்பட்ட சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் பெறுங்கள் என்று கூறுவர்.(மேலும்) இவ்வுலக வாழ்கையிலும் மறுமை யிலும் நாமே உதவியாளர்கள். உங்களது மனங்கள் விரும்பு பவை உண்டு. மேலும் அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு உண்டு.(என்றும் கூறுவர் இது) மிக்க மன்னிப் பவனான நிகரற்ற அன்பு டையவ(னான அல்லாஹ்வி) னிடமிருந்துள்ள விருந்தா கும்.(41:30-32)





இவ்வாறான சுபசோபனத்தின் இன்னுமொரு பக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறி னார்கள்.





முஃமினான அடியான் இம்மையை விட்டு மறுமைக்கு போகும் போது (அவனது மரணத்தருவாயில்) சூரியனைப் போன்று பிரகாசமுடைய வெண் மையான முகத்துடைய மலக்குகள் வானத்திலிருந்து இறங்கு வார்கள். அவர்களிடம் சுவர்க்கத்து துணியிலான கபன் துணியும் சுவர்க்கத்து கஸ்தூரியும் இருக்கும் அவ்வடியானின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் அம் மலக்குகள் இருப்பார்கள். உயிரை கைப்பற்றும் மலக்கு அவ்வடியானின் தலைப்பக்கமாக உட்கார்ந்து “நல்ல ஆத்மாவே (அமைதியடைந்த ஆத்மாவே) அல்லாஹ்வின் மன்னிப்பின் பாலும் பொருத்தத்தின் பாலும் வெளியேறு வாயாக என்று கூறுவார். உடனே அவ் வடியானின் உயிர் தண்ணீர் பாத்திரத்திலிருந்து தண்ணீர் சொட்டு விழுவது போல்(எவ்வித கஷ்டமுமின்றி) வெளியேறும் அதனை அம்மலக்கு எடுத்துக் கொள்வார்;.





(இன்னுமொரு அறிவிப்பின்படி)அவ்வடியானின் உயிர் பிரிந்தவுடன் வானத்திற்கும் பூமிக்கும் இடை யிலுள்ள வான வர்களும் வானத்திலுள்ள எல்லா வானவர்களும் அவ்வாத் மாவுக்கு பிரார்த்தனை புரிவார்கள். அத்தனை வானவர்களும் தங்களுக்கு முன்னால் அவ்வாத்மாவை கொண்டு செல்லும் படி அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பார்பார்கள்.





மலக்குல் மவ்த் அவர்களது கையில் அவ்வடியானின் உயிர் கிடைத்தவுடன் கணமும் தாமதியாது மனங்கமலும் அந்தச் சுவனத்து கபனில் அதனைப் பத்திரப்படுத்தி வைப்பார்கள். இதனையே அல்லாஹ் குர்ஆனில்





அவன் தன் அடியார்களை அடக்கியாள்பவனாக இருக்கிறான் அன்றியும் உங்கள் மீதும் பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான். உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து விடுமானால், நம்வானவர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தம் கடமையில் தவறுவ தில்லை.(6:61) என்று கூறுகிறான்.





அதன் பின் பூமியில் இருந்ததை விட அதிக வாசனையுடன் அவ்வுயிரை வானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அதனைக் காணும் வானவர்கள் எல்லாம் இவ்வுயரிய வாசனையுடைய ஆத்மா யாருடையது என்று கேட்பார்கள். இன்னாருடைய மகன் இன்னாருடையது என்று உலகத்தில் அவனுக்கு வழங்கப்பட்ட அழகிய பெயரைக் கூறுவார்கள் முதல் வானத்திற்குச் சென்றவுடன் வழி திறக்கும் படி வானவர்கள் கேட் பார்கள். அவர்களுக்கு வழி திறக்கப்படும். இவ்வாறே ஒவ்வொரு வானத்திலும் நடைப்பெறும். ஏழாவது வானத்திற்கு அந்த ஆத்மா சென்றதும் எனது நல்லடியானின் பெயரை இல்லிய்யூன் (நன்மை செய்தோரின் பட்டியல்) எனும் ஏட்டில் எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்.





இல்லிய்யூன் என்பது என்னவென்று உமக்கு எது அறி வித்தது? (அல்லாஹ்விடம); நெருங்கிய (கண்ணியம் மிக்க) மலக்குகள் அதைப்பார்ப்பார்கள். (83:19-21)





அவ்வடியானின் பெயர் அதில் பதியப் பட்டவுடன் அந்த ஆத்மாவை பூமிக்கு கொண்டு செல்லுங்கள் (ஏனெனில் என்வாக்கு நிறைவேற்றப்பட வேண்டும்) பூமியிலிருந்தே படைத்தோம் பூமிக்கே மீளச்செய்வோம். பூமியிலிருந்தே மீண்டும் எழுப்புவோம். இதன் பிரகாரம் அந்த ஆத்மா கொண்டு வரப்பட்டு அவ்வடியானின் உடலில் சேர்க்கப்படும; அப்போழுது அவ்வடியான் கப்ரில் நல்லடக்கம் செய்யப்பட்டு எல்லோரும் வீடுகளுக்குத் திரும்பும் காலடி ஓசை முடிந்த பின் இரு பயங்கரமான வானவர்கள் வந்து உனது ரப்பு யார்? என்று கேட்பார்கள். அவ்வடியான் எனது ரப்பு அல்லாஹ்தான் என்று கூறுவான்





உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். எனது மார்க்கம் இஸ்லாம் எனக்கூறுவான். உனக்கு அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்? என்று கேட்பார்கள். அவர் அல்லாஹ்வின் தூதராவார் எனக் கூறுவார் இதுபற்றி உனக்கு எப்படி தெரியும்? எனக் கேட்பார்கள். அதற்கவன் அல்லாஹ்வின் வேதத்தைப்படித்தேன். அல்லாஹ்வை விசுவாசித்தேன் அவனை உண்மைப்படுத்தினேன் என பதிலளிப்பான்.





(மீண்டும் அவனிடம்) உனது ரப்பு யார் உனது மார்க்கம் என்ன உனது நபி யார் என்று கேட்பார்கள். இதுதான் ஒரு உண்மை விசுவாசிக்கு ஏற்படும் கடைசிச் சோதனை யாகும்.எனினும் “எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். இன்னும் அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான் (14:27)





மலக்குகளின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது ரப்பு அல்லாஹ் எனது மார்க்கம் இஸ்லாம் எனது நபி முஹம்மத் (ஸல்) என்று பதிலளிப்பான்.





அப்பொழுது எனது அடியான் உண்மையுரைத்து விட்டான். அவருக்காகச் சுவர்க்கத்தின் விரிப்புக்களை விரித்து விடுங்கள். சுவர்க்கத்து ஆடைகளை அணிவியுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை திறந்து விடுங்கள் என்று கூறக்கூடிய ஓசை யொன்று வானிலிருந்து வரும். சுவர்க்கத்து வாடையை அவ்வடியான் நுகர்வான். கண்பார்வை எட்டு மளவுக்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.





அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்த ஒரு மனிதர் அவ்வடியானிடம் வருவார். அல்லாஹ்வின் பொருத்த மும் நிலையான சுகங்களின் இருப்பிடமான சுவர்க்கத்தையும் பெற வாழ்த்துகிறேன். இதுதான் உனக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும் என்று கூறுவார்.





அந்த முஃமின் அம்மனிதரை நோக்கி உங்களுக்கும் அல்லாஹ்வின் நல் வாழ்த்து கிடைக் கட்டுமாக. “நீங்கள் யார்? உங்களின் அழகிய முகமே நற் செய்திகளைத் தருகின்றன என்று கேட்பார். “நான் தான் (நீர் உலகில் தேடிவைத்த) ஷஸாலிஹான அமல்கள்|. அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நற்செயல்கள் புரிவதில் தீவிரமும் பாவங்களை செய்வதில் தாமதமும் காட்டிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலித் தருவானாக என்று அந்த அழகிய முகத்துக்குரியவர் கூறுவார்





அதன்பின் சுவனத்து வாசலும் நரகத்து வாசலும் காண்பிக்கப்பட்டு நீஅல்லாஹ்வுக்கு வழிபடா திருந்திருந்தால் இது தான் நீ செல்லும் பாதை என்று நரகத்து வாசலை காண்பித்து விட்டு அல்லாஹ் உனக்கு இதை மாற்றி விட்டான் எனக் கூறி சுவனத்து வாசல் காண்பிக் கப்படும். சுவனத்தின் சுகபோகங்களைக் கண்டதும் அவ்வடியான் யாஅல்லாஹ்! மறுமையை சீக்கிரம் உண்டாக்கு வாயாக என்று கூறுவான். அமைதியாக இருப்பாயாக என அவனுக்கு கூறப்படும்.





இன்னுமொரு அறிவிப்பின் படி அல்லாஹ்வே! நான் பெற்றிருக்கின்ற இன்பத்தை சொல்வதற்கு என்னை என் குடும்பத்தாரிடம் அனுப்பிவை என்று அந்த முஃமின் கூறுவார். புது மாப்பிள்ளையை அவ ருக்கு விருப்பத்திற்குரியவர் எழுப்பும் வரை உறங்குவது போல் அல்லாஹ் உன்னை மறுமையில் எழுப்பும் வரை தூங்குவாயாக என்று இரு மலக்குகளும் அவருக்கு கூறுவார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஃமினுடைய இறுதி முடிவு இவ்வாறு காணப்படும். ஆனால் பாவியின் நிலையோ இதற்கு மாற்றமாக இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறிய நீண்ட ஹதீஸில் காணமுடிகிறது. (நூல்: அஹ்மத் அபூதாவுத் நஸயீ ஹாகிம் இப்னுமாஜா)





ஜனாஸா ஸன்தூக்கில் வைக்கப்பட்டு அதை தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)





மரணத்தின் பின் வாழ்வுக்காக செய்த நல்லமல்களின் பயன்களை உயிரை கைப்பற்றும் நேரத்திலேயும் மண்ணறையிலும் அல்லாஹ் காட்டுகிறான் என்பதை இந்த ஹதீஸகள்; தெளிவுபடுத்துகின்றன. மேலும் அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.





மையத்தை மூன்று விடயங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. அதில் இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்றே ஒன்று மட்டும் மையத்துடன் தங்கி விடுகின்றது. அவனது குடும்பம் அவனது செல்வம் அவ னது நல்லமல். இந்த மூன்றில் அவனது குடும்பமும் அவனது செல்வமும் திரும்பி விடுகிறது. அவனது அமல் மட்டும் அவனுடன் தங்கி விடுகிறது என்றார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)





மனிதன் வாழும்போது அவனது குடும்பத்திற்காக வாழ்ந்தான் குடும்பத்திற்காக உழைத்தான். உயிர் பிரிந்ததும் அவ்விரண்டும் அவனுடன் வரப்போவதில்லை. இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது பற்றி மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பேசுவார்கள். குடும்பம் சொந்தம் பந்தம் உறவுகள் அனைத்தும் மண்ணறைவரை வரும். அதன் பின் திரும்பி விடும்.





அவன் இரவு பகலாக சிரமப்பட்டு தேடிய சொத்துக்கள் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் கை விட்டு மூன்று கபன் துணிகளுடன் தனியாக போகிறான்.





அவனது சொத்துக்களை மனைவி மக்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள். உலகில் அடுத்தக் கட்ட வாழ்வைப் பற்றி அவர்கள் சிந்திப்பார்கள். காலப்போக்கில் அவனை மறந்து விடவும் கூடும். குடும்பத்திற்கு பொறுப்பாளர் ஒருவர் தேவை என்று கூட விவாதிக்கவும் கூடும். இது தான் யதார்த்தம். மரணித்த ஒருவருக்காக எப்போதும் கவலையுடனும் கண்ணீருடனும் எவரும் இருக்கப் போவதில்லை. காலப் போக்கில் நிலைமை சாதாரணமாகி விடும். இதற்கு காரணம், இறந்தவர் சென்ற பின், எஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்க்கையை தொடர்ந்து நடத்த வேண்டும்.





இந்த நிகழ்வு தான் மறுமையிலும் நடக்கப் போகிறது. தாய் தந்தை கணவன் மனைவி சொந்தம் பந்தம் பெற்றோர் பிள்ளை என்ற உறவைப்பற்றி எவரும் கவனி க்க மாட்டார்கள். தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற சுயநலத்துடனே அங்கு இருப்பார் கள். அல்லாஹ் கூறுகிறான்:,





“பயங்கர சத்தம் வந்து விட்டால் அந்த (மறுமை) நாளில் மனிதன் தன் சகோதரனையும் தன் தாயையும் தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் விட்டு விரண்டு ஓடுவான். அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் (பிறரை விட்டும்) அவனை திசை திருப்பும் காரியம் உண்டு.(80:33-37)





இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டே நடுநிலை தன் மையுடன் உலகத்திற்காகவும் மறுமைக்காகவும் வாழுமாறு இஸ்லாம் பணிக்கிறது. இது மாபெரும் சோதனை. சோதனை யில்லாமல் சுவனம் கிடைக்கப் போவதில்லை. இச்சோதனைக் காவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதில் வெற்றி பெருவதே இறைவிசுவாசியின் இலட்சியம். இதனையே மேலே உள்ள அல்குர்ஆன் வசனம் எமக்கு உணர்த்துகிறது.





இச்சோதனையில் எம்மை என்றென்றும் காப்பாற்றப் போவது நாம் செய்யும் ஸாலிஹான நல்லமல்கள்தான். எனவே நல்லறங்கள் குறித்தே அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்.





நல்லமல்கள் இருவகைப்படும்.





إِنَّا نَحْنُ نُحْيِ الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ





நிச்சயமாக நாமே மரணித்தவர்களை உயிர்பிப்போம். அவர்கள் முற்படுத்தியவற்றையும் அவர்களது அடிச்சுவடுகளையும் நாமே பதிவு செய்கின்றோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் அதை நாம் கணக்கிட்டு வைத்திருக்கிறோம். (36:12)





மனிதன் முற்படுத்துகின்ற நன்மை மற்றும் தீமைகள் பதிவு செய்யப்படுவது போல் அவன் பிறருக்கு காட்டுகின்ற நன்மை தீமைக்குமான முன்னுதாரணங்களும் பதிவு செய்யப்படுகின்றன என இவ்வசனம் குறிப்பிடுவதாக இமாம் இப்னு கஸீர் (ரஹ்) இமாம் பகவீ(ரஹ்) இமாம் குர்துபி(ரஹ்) ஆகியோர் விளக்கம் அளிக்கிறார்கள். எனவே நன்மைக்கான ஊக்குவிப்புக்களை இருவகையாக காணலாம்





1. மனிதன் தனக்காக செய்து கொள்ளுகின்ற நல்லமல்கள்.





அதாவது தொழுவது நோன்பு நோற்பது, ஸகாத் மற்றும் தர்மங்கள் கொடுப்பது போன்ற இபாதத்களுடன் தனக்கென ஸாலிஹான குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது. தன்னு டைய அறிவு ஆற்றல்களை மக்கள் பயனடையும் வகையில் ஈடுபடுத்திக் கொள்வதாகும்.





2. சமூகத்தின் மேம்பாட்டுக்காக செய்து கொடுக்கும் நல்லறங் கள்.





அதாவது ஏழை எளியவர்கள், அனாதைகள், விதவைகள், தேவையுடையோர் போன்றோருக்காக உதவிகள் செய்து கொடுப்பது, சமுதாய விழிப்புணர்வு காரியங்களை மேற்கொள் வது போன்றவையாகும். பின்வரும் ஹதீஸ்களைப் பாருங்கள்.





صحيح مسلم (3/ 1255(





عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ.





மனிதன் மரணித்துவிட்டால் மூன்று விடயங்களைத் தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனை விட்டும் நின்று விடுகின்றன.





1. அவன் செய்த நிலையான தர்மம்(ஸதகதுல் ஜாரியா)





2. (மக்களுக்காக விட்டுச் செல்லும்) பயன் படும் கல்வி அறிவு





3. அவனுக்காக துஆச்செய்யும் சாலிஹான பிள்ளை (இவை களால் அவனுக்கு மரணத்திற்குப் பின், கூலி கிடைத்துக் கொண் டிருக்கும்) என நபி (ஸல்) கூறினார்கள்.





அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம் (1631)





سنن ابن ماجه (1/ 88)





عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ، وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ، وَمُصْحَفًا وَرَّثَهُ، أَوْ مَسْجِدًا بَنَاهُ، أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ، أَوْ نَهْرًا أَجْرَاهُ، أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ، يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ .





முஃமினின் மரணத்திற்குப் பின்னால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்பது, அவன் (மக்களுக்கு) கற்றுக் கொடுத்த கல்வி அறிவும் அதனை (மக்களிடையே) பரவச் செய்ததும், சாலிஹான குழந்தையை (அவனுக்காக பிரார்த்தனை செய்வதற்கு) விட்டுச் சென்றதும், (மக்கள் பயன்பெறுவதற்கு) (கல்வி அறிவுள்ள) ஒரு ஏட்டை (புத்தகத்தை எழுதி) விட்டு செல்வதும், பள்ளிவாசலை கட்டுவது வழிப் போக்கர்களுக்காக ஒரு மடத்தை கட்டுவது, தண்ணீர் வசதி செய்து கொடுப்பது, சுகதேகியாக ஆரோக்கியமாக வாழும் நிலையில் தனது செல்வத்திலிருந்து தர்மங்கள் செய்வதுமாகும். இதற்கான நற்கூலிகள் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா)



Recent Posts

Сухане чанд бо аҳли х ...

Сухане чанд бо аҳли хирад

Фақат барои ҷавонон д ...

Фақат барои ҷавонон дар Рамазон

Қуръон аз дидгоҳи дон ...

Қуръон аз дидгоҳи донишмандони ғарбӣ

Ҳаёт маҷмуъаи варақҳо ...

Ҳаёт маҷмуъаи варақҳо аст