Articles





ஷீஆக்கள் என்போர் யார்?





தமிழ்​ பேசும் முஸ்லிங்களுக்கு வழி காட்டல்





] தமிழ் – Tamil –[ تاميلي





எழுத்தாளர்





எம். எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி.





2013 - 1434









من هم الشيعة؟





توضيح للمسلمين الذين يتحدثون اللغة التاميلية





« باللغة التاميلية »





إسماعيل يوسف سلفي





2013 - 1434





ஷீஆக்கள் என்போர் யார்?





தமிழ்​ பேசும் முஸ்லிம்களுக்கு வழி காட்டல்





எம். எஸ். எம் இம்தியாஸ் யூசுப் ஸலபி.





(ஷீஆ என்ற பிரிவனர் எங்​கே, எப்போது, எப்படி தோற்றம் பெற்றனர்? இவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள் என்ன? உலக முஸ்லிம்களிலிருந்து இவர்கள் வேறு பட்டு நிற்பது ஏன்? என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம். என்பதால் அவற்றை சுருக்கமாக முன் வைக்கிறேன்)





அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் சஹாபாக்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் என்றும் உண்டாவதாக! அன்புக்குரிய முஸ்லிம்களே! எங்கள் ஈமானிய பிரச்சனைப் பற்றி இங்கு பேசுகிறோம். தயவு செய்து இப்பிரசுரத்தை நிதானமாக வாசித்து விட்டு உங்களைப் போன்ற ஈமானுள்ள ஒரு முஸ்லிமை காப்பாற்ற முன்வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!





ஷீஆவின் தோற்றம்.





நபி(ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்கள் முஸ்லிம் களையும் இஸ்லாத்தையும் சிதைப்பதற்காக எடுத்த பல்வேறு முயற்சிகளில் தோல்வி கண்டனர். நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 35 வருடங்களுக்குப்பின் சன்ஆ எனும்பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருவினான்.





உஸ்மான் (ரலி) அவர்களது தலைமையின் கீழ் ஒன்று பட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டு பண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித் தாளும் சூழ்ச்சியினை நடைமுறைப்படுத்திய சாபம் இவனைச் சாரும். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அன்று உருவாக்கிய இரத்தக் களரி தான் இன்று வரை ஷீஆ சுன்னிமுஸ்லிம் என்று ஓடிக் கொண்டிருக்கிறது. இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவு தான் ஷீஆ எனும் மதப்பிரிவாகும்.





அலி (ரலி) அவர்களது குடும்பத்தினருக்கு கிலாபத் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் எனக் கோரி அரசியல் பிரவேசம் செய்த ஷீஆக்கள், அபூபக்கரும் உமரும் அலிக்கு கிலாபத் பொறுப்பை கொடுக்காமல் தட்டிப் பறித்து அநீதி இழைத்து விட்டு அலியிடம் மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் என சபிக்கின்றனர். (நூல்.அல்காபி:பாகம்:8 பக்; 245)





ஷீஆக்களின் இப்பிரச்சாரத்திற்கும் அலி (ரலி) அவர் களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எச்சம்பந்த மும் இருக்கவில்லை. அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோருக்கு எதிராக குறை கூறி வசை பாடுகின்ற பணியை முதலில் ஆரம்பித்து வைத்து பித்னாவை உண்டு பண்ணிய யூதனான அப்துல்லாஹ் இப்னு ஸபாவுக்கு அலி (ரலி) மரண தண்டனை வழங்கிய வேளையில் அவனுக்காக சிலர் பரிந்துரைத்த போது மதாஇன் எனும் பகுதிக்கு நாடு கடத்தப் பட்டான்





அலி (ரலி) அவர்களுக்கும் அபூபக்கர்(ரலி) உமர் (ரலி) மற்றும் ஏனைய சஹாபாக்களுக்கு மிடையில் சினேகப் பூர்வமான நட்பும் நேசமும் இருந்ததே தவிர ஷீஆக்கள் கூறுவது போல் மார்க்க ரீதியான, அரசியல் ரீதியான பகைமை, குரோதம் ஒருபோதும் இருந்ததில்லை. அலி (ரலி) அவர்களுக்கு கிலாபத் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நபியவர்கள் வஸீயத் செய்திருந்தால் சஹாபாக்கள் அக்கட்டளையை தலைக்கு மேல் வைத்து நிறைவேற்றியிருப்பார்கள். உண்மையான முஃமின்கள் சுவனத்தின் வாரிசுகள் என்று அல்லாஹ்வினால் நற் செய்தி சொல்லப்பட்ட சஹாபாக்கள் ஒரு போதும் அநியாயம் செய்ய மாட்டார்கள்.





புதிய மார்க்கம் - புதிய கலிமா





நபி(ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தின் அத்திவாரத் தையே பிடுங்கி எறிந்து விட்டு புதிய மார்க்கத்தை தோற்றுவிப்பது என்ற ஷீஆவின் நோக்கத்தை பின் வருமாறு முன் வைத்தார்கள்.





அல்குர்ஆனை (வஹீயை) அலிக்கு கொடுக்குமாறு அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பி வைத்தான். அலியும் முஹம்மத் நபியும் தோற்றத்தில் ஒன்றாக இருந்த காரணத்தால் அலிக்கு கொடுக்க வேண்டிய வஹியை முஹம்மதுக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டுப் போனார் என்கிறார்கள். (நூல்:அல்மனீய்யா வல்அமல்.பக்கம்.30)





ஷீஆவின் இக்கொள்கை குராபிய்யா எனப்படும். அல்லாஹ்வும் ஜிப்ரீலும் அலிக்கு நபித்துவத்தை கொடுக்காது துரோகமிழைத்தது மட்டுமன்றி நபியவர்கள் கூட நடந்த தவறை திருத்தம் செய்யாமல் போய் விட்டார்கள் என்று கண்டிக்கிறார்கள்.





கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐந்து தூண்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்பது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை. இவ்வடிப் படையை அப்படியே மாற்றி விட்டு புதிய கலிமாவை உருவாக்கினர். 1.தொழுகை 2.நோன்பு 3. ஜகாத் 4.ஹஜ் 5.விலாயத்து அலி. (அலியின் தலைமைத்துவம்) இந்த ஐந்தில் “விலாயத்து அலியே” மிகச் சிறந்தது என போதித்தார்கள். (நூல்:அல்காபி)





அலி(ரலி) அவர்களின் கிலாபத் (ஆட்சி) பொறுப்பே ஈமானின் முக்கிய அம்சம் என்று மாற்றியதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் போதித்த கலிமாவை ஓரம் கட்டி விட்டார்கள்.





சஹாபாக்கள் மதம் மாறியவர்களாம்





ஷீஆ கொள்கையை நிலை நாட்ட வேண்டுமானால் நபித் தோழர்களான சஹாபாக்களை தீயவர்களாக கெட்ட மனிதர்களாக முர்தத்களாக காண்பித்து அதன் மூலம் இஸ்லாத்தின் நம்பகத்தன்மையை மழுங்கடித்து குர்ஆன் ஹதீஸை போலியானதாக மாற்றி விடவேண்டும். அதன் பின் ஷீஆவுக்கென பிரத்தியேகமான குர்ஆன் ஹதீஸை அலி(ரலி) பெயரிலும் ஷீஆவின் மார்க்கப் பெரியார்களின் பெயரிலும் உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கினார்கள்.





நபித்தோழர்களில் அலி ஹஸன், ஹுஸைன், மிக்தாத், அம்மார் பின் யாஸிர், ஸல்மானுல் பாரிஸீ, சுஹைப், பாத்திமா(ரழி) அவர்களுடன் மற்றும் சில நபித்தோழர்கள் போக ஏனைய அனைவர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள்; என்று அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர்.





மேலும் ஆண்களில் நான்கு சிலைகளும், பெண்களில் நான்கு சிலைகளும் உள்ளன. அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான்(ரலி) முஆவியா(ரலி) ஆகியோர் ஆண் சிலை களாவர். ஆயிஷா(ரலி) ஹப்ஸா(ரலி) ஹிந்து(ரலி) உம்முல் ஹகம்(ரலி) ஆகியோர் பெண் சிலைகளாவர். நிச்சயமாக இந்த பூமியின் மேல் அல்லாஹ்வின் படைப்புக்களில் இவர்களே மிகவும் மோசமானவர்கள். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஷீஆ) இமாம் களையும் நம்பக்கூடியவர் இவர்களை தங்களுடைய எதிரிகளாக நம்பாத வரை ஈமான் பூர்த்தியடையாது என்பது எங்களது (ஷீஆ) கொள்கைகளில் உள்ளதாகும். (நூல்:ஹக்குல் யகீன் பக்கம்.519)





நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களான ஆயிஷாவும் ஹப்ஸாவும் மோசமான நடத்தைக் கெட்ட பெண்களா வர். (நூல்:தப்ஸருல்கும்மி பாகம்2.பக்கம்.377)





நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுடன் இணைந்ததற்காக நபியின் அபம் நரகம் நுழையும். (நூல்:கஷ்புல் அஸ்ரார் பக்கம்24)





நஊதுபில்லாஹ்! இந்த வானங்களும் பூமியும் ஏற்றுக் கொள்ளாத அபாண்டத்தை சுமத்தி இந்த உம்மத்தின் தாய்மார்கள் உம்மஹாதுல் முஃமினீன் எனகூறப்படும் நபியவர்களின் மனைவிமார்களையும் சஹாபாக்களை யும் எதிரிகளாகவும் நரகவாதிகளாகவும் ஆக்கி விட்டார்கள் இந்தப் பாவிகள்.





சஹாபாக்கள் மீது அபாண்டங்களை சுமத்தி அவநம்பிக்கையினை ஏற்படுத்தினால் தான் இஸ்லாத்தின் அடிப் படைகளை முழுமையாக தகர்த்து விட முடியும் என்ற நோக்கிலேயே பிரச்சாரத்தினை கட்டவிழ்த்து விட்டார்கள்.





தியாகத்தின் செம்மல்கள் சுவனத்தின் சொந்தங்கள் என்று அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் சஹாபாக்களை குறித்து நற்செய்தி கூறியிருக்கும் போது சஹாபாக்களையும் நபிகளாரின் மனைவிமார்களையும் முஃமின்கள் என்று அழைக்கமாட்டோம் என்று மறுக்கும் இந்த ஷீஆக்கள் ஒருஜினல் யூதர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் இவர்கள் ராபிளாக்கள்|| என்றும் அழைக்கப்படுகிறார்கள்.





ஈரானியப் புரட்சியின் சிற்பி எனவும் நவீன இமாமாகவும் வர்ணிக்கப்படும் ஆயதுல்லாஹ் குமைனி சஹாபாக் களை பற்றி குறிப்பிடும்போது: நீங்கள் ஸஹாபாக்கள் என கூறும் அவர்கள் நயவஞ்சகர்கள், முனாபிக்குகள், என்கிறார். (நூல்:உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம்69.)





இவரை இமாம் என்று எழுதுவதற்கோ அழைப்பதற்கோ தகுதியுண்டா? சஹாபாக்களை திட்டுகின்றவர் உண்மை யான முஸ்லிமாக இருக்க மாட்டார். ஒருதுளி ஈமான் உள்ளவர் கூட ஷீஆவுடன் தொடர்ப்பு வைக்க மாட்டார்.





புதியதோர் குர்ஆனை கொண்டு வருதல்.





உலக முஸ்லிம்களிடம் காணப்படும் அல்குர்ஆனில் உண்மை இல்லை என்றும் அதில் சஹாபாக்கள் கூட்டல் குறைவுகள் செய்து திரிபு படுத்தி விட்டனர் என்றும் ஷீஆக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.





நபித்தோழர்கள் அல்குர்ஆனை ஒன்று திரட்டிய போது அலி (ரழி) அவர்களின் ஆட்சியை அறிவுறுத்தும் இறங்கி இருந்த அத்தியாயங்களான 'அல்விலாயா' 'அந்நூரைன்' என்ற இரு அத்தியாயங்களையும் திட்டமிட்டே மறைத் துள்ளனர்.





இவை மாத்திரமின்றி 'அலம் நஷ்ரஹ்' அத்தியாயத்தில் (وجعلنا عليًّا صهرك) 'வஜஅல்னா அலிய்யன் லக்க ஸிஹ்ரக்' 'அலியை உமது மருமனாக ஆக்கினோம்) என்ற வசனத் தையும் இன்னும் ஏராளமான வசனங்களையும் இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.





(ஷீஆ) நம்மிடம் முஸ்ஹஃப் பாதிமா என்ற குர்ஆன் இருக்கின்றது. அது உங்களின் குர்ஆனைவிட மூன்று மடங்குடையது. அதில் உங்கள் குர்ஆனில் உள்ள ஒரு எழுத்து கூட இல்லை என்கிறார்கள். (நூல்: அல்காபி பாகம்.2பக்கம்597)





முஹம்மத் நபிக்கு தவறாக வஹி அருளப்பட்டது என்று விமர்சித்தவர்கள் தங்களிடம் பிரத்தியேகமான அல் குர்ஆன்; இருப்பதாக ஒப்புதல் வாக்கு தருகிறார்கள். அக்குர்ஆன் 17.000 வசனங்களை கொண்டதாக இருப்ப தாகவும் அதனை அவர்களுடைய 12 வது இமாம் வரும் போது கொண்டு வருவார் என கூறுகிறார்கள். இந்த இமாம் பிறந்து 5ம் வயதில் ஈராக்கிலுள்ள குiக யொன்றில் மறைந்து விட்டாராம். அவருடைய வருகை யை விரைவுப் படுத்த வேண்டும் என்பதற்காக அஜ் ஜலல் லாஹூ பர்ஜஹூ என்பார்கள்.





ஹதீஸ்களை நிராகரித்தல்:





சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களையும் இமாம்கள் தொகுத்த ஹதீஸ் நூற்களான சஹீஹூல் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, அபூதாவுத், நஸாயீ, முவத்தா, முஸ்னத் அஹ்மத் போன்ற கிதாபுகளையும் ஷீஆக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டு ஷீஆவின் பரம்பரையில் வந்த பெரியார்களை இமாம்களாகவும் அவர்கள் சொன்ன செய்திகளையே ஹதீஸ்களாகவும் ஏற்று பின்பற்றுவார்கள்.





முஸ்லிம்கள் மதிக்கின்ற அஹ்லுல் பைத் சம்பந்தமாக வரக் கூடிய ஹதீஸ்களை மட்டும் எமது ஹதீஸ் நூல்களில் இருந்து எடுத்துக் காட்டி அலி (ரலி), பாதிமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூசைன்(ரலி) ஆகியோரை நாமும் மதிக்கிறோம். ஷீஆவும் சுன்னியும் ஒரே விடயத்தைத் தான் பேசி வருகிறோம் என மழுப்புவார்கள். ஆனால் அந்த ஹதீஸ்களை அறிவித்த இமாம்களை, சஹாபாக் களை “ரலியல்லாஹூ அன்ஹூ|| என கூற மாட்டார்கள். தங்களது நூல்களிலும் சஞ்சிகைகளிலும் எழுத மாட்டார் கள்.





12 இமாம்களை நம்புதல்;:





அலி (ரலி)அவர்களின் பரம்பரையில் வந்ததாக கூறப் படும் ஷீஆவின் 12பேர்களை மட்டுமே இமாம்களாக மதிப்பர். இந்த இமாம்கள் பாவத்தை விட்டும் பரிசுத்த மானவர்கள், தவறுகள், மறதிகளை விட்டும் அப்பாற் பட்டவர்கள். இந்த உலகில் நடந்து முடிந்தவை நடந்து கொண்டிருப்பவை இனி நடக்கப் போகின்றவை பற்றிய அறிவு பெற்றவர்கள். அவர்களது மரணம் எங்கு எப்போது வரும் எந்த இடத்தில் மரணிப்பது என்ற முடிவு செய்வதும் அவர்களாலே மேற்கொள்ளப்படும் என்கிறார் கள்.





உலகில் நடை பெறுகின்ற எந்தவொரு சம்பவமும் அது நடைபெற்ற பின்பு தான் அல்லாஹ்வுக்கு தெரியவருமே தவிர அது நிகழ்வுதற்கு முன்பு தெரியாது என்றும் (அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனல்ல என்றும்) கூறுகின்றனர். இதனை அல்பதா என அழைக்கிறார்கள்.





ஷீஆக்களின் நவீனகால இமாம் ஆயதுல்லாஹ் குமைனி தங்களது இமாம்களைப் பற்றி கூறும் போது:





وإن من ضروريات مذهبنا أن لأئمتنا مقاما لا يبلغه ملك مقرب، ولا نبي مرسل الحكومة الإسلامية: ص:52)





நமது இமாம்களுக்கு இருக்கும் அந்தஸ்து அல்லாஹ் வின் நெருக்கத்திற்குரிய மலக்குகளுக்கோ அல்லது அல்லாஹ் வினால் அனுப்பப்பட்ட நபிக்கோ கிடையாது என்பது நமது கொள்கையில் (ஷீஆ மதத்தில்) அவசியம் அறிந்திருக்க வேண்டும் என்கிறார். (நூல்: உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம்52.)





ஷீஆவின் இமாம்கள் மலக்குகளை விட, நபிமார்களை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்று கூறுபவர் முஸ்லிமாக இருக்க முடியாது. இவர் ஈரானில் ஏற்படுத்தியது இஸ்லாமியப் புரட்சியா? அல்லது ஷீஆ புரட்சியா? என்பதை மக்களே நீங்கள் சொல்லுங்கள்.





பpன்வருவோர் ஷீஆக்களின் இமாம்களாக மதிக்கின்றனர்.





1. அலி பின்; அபீதாலிப்.(ரழி) (அல்முர்தளா-





பிறப்பு: ஹி. 23- மரணம். 40)





2- அபுல் ஹஸன் என்றழைக்கப் படும் 'அஸ்ஸகி' என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான ஹஸன் பின்; அலி (ரழி) (50- 52)





3- அபூஅப்தில்லாஹ் என்றழைக்கப்படுபவரும் செய் யிது ஷ் ஷுஹதா என்ற. சிறப்புப் பெயர் பெற்றவருமான ஹுஸைன் பின் அலி. (ஹி:3-61)





4- அபூ முஹம்மத் என்றழைக்கப்படுபவரும் சைனுல் ஆப்தீன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான அலி பின் ஹுஸைன் (ஹி: 38- 95).





5- அபூ ஜஃபர் என்றழைக்கப்படுபவரும் அல்பாகிர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான முஹம்மத் அலி. (ஹி: 57- 117).





6- அபூஅப்தில்லாஹ் என்றழைக்கப்படுபவரும் 'அஸ் ஸாதிக்' என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான ஜஃபர் பின் முஹம்மத். (ஹி: 83- 148).





7- அபூ இப்ராஹீம் என்றழைக்கப்படுபவரும் 'அல் காழிம்' என்ற சிறப்புப் பெயர் பெற்றவருமான மூஸா பின் ஜஃபர் (ஹி: 128- 183).





8- 'அர் ரிழா' என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபுல்ஹஸன் அலி பின் மூஸா.(ஹி: 248-203)





9- 'அல் ஜவாத்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபூ ஜஃபர் முஹம்மத் பின் அலி (ஹி:195- 220)





10- 'அல் ஹாதி' என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபூ ஹஸன் அலி பின் முஹம்மத். (ஹி:232-260)





11- 'அல் அஸ்கரி' என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபூ முஹம்மத் அல்ஹஸன் பின் அலி( ஹி: 232-260)





12- 'அல் மஹ்தி' என்ற சிறப்புப் பெயர் பெற்ற அபுல் காஸிம் முஹம்மத் பின் அல் ஹஸன். (ஹி: 256) இவர் (ஹி: 256- ல் சிறுவருவத்தில் மரணமடைந்ததாகக் கூறும் ஷீஆக்கள் இவர் இன்று வரை மறைந்து வாழ்வதாக நம்புகின்றனர்.





இமாம்களின் மறு பிறப்பு:





இந்த உலகத்தில் மரணிக்கின்ற எவரும் திரும்பி வரப் போவதில்லை என்பது இஸ்லாத்தின் கொள்கை. ஆனால் ஷீஆவின் மறைந்து வாழும் 12வது இமாமாக கருதும் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரி என்பவர் ஹிஜ்ரி 256ல் பிறந்து ஐந்தாம் வயதில் (இராக்கில்) குகையொன்றில் மறைந்து விட்டாராம். இவர் திரும்பி வரும் போது முஸ்ஹப்பாதிமா எனும் குர்ஆனை கொண்டு வந்து நீதியை நிலை நாட்டுவதுடன் அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோரை கப்றுகளிலிருந்து எழுப்பி சிலுவையில் அறைவார் என்று கூறுகிறார்கள். (நூல்: இய்காலுமினல் ஹஜ்இதி)





இது பற்றிக் குறிப்பிடும் குமைனி தனது இஸ்லாமிய அரசு எனும் நூலில்: 26-வது பக்கத்தில்





' وقد مر على الغيبة الكبرى لإمامنا المهدي أكثر من ألف عام... وقد تمر ألوف السنين قبل أن تقضى المصلحة قدوم الإمام المنتظر ( الحكومة الإسلامية. ص:22)





'நமது இமாம் மஹ்தி அவர்களின் பெரும் மறைவிற்கு பின் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்து விட்டன. எதிர்பார்க்கப்பட்ட அந்த மஹ்தி வருவதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் போகலாம்'. ஏன்கிறார் (நூல்: அல்ஹூகூமத் அல்இஸ்லாமியா பக்கம்22)





இந்த இமாமைத் தான் இமாம் மஹ்தி'' என ஷீஆக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் குறிப் பிடும் இமாம் மஹ்தி இவரல்ல.





மேலும் குமைனி கூறுவதை கேளுங்கள். :நபிமார்கள் அனைவரும் உலகில் நீதியின் சட்டங்களை நிலை நாட்;டவே வந்தனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற வில்லை. மனித இனத்தை சீரமைத்து மனிதத்தை பரப்பி மனிதர்களை சீர் செய்ய வந்த இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூட இதில் வெற்றி பெறவில்லை. சகல விதமான மனிதர்கள் மத்தியிலும் நீதியின் சட்டங்களை நிலை நிறுத்தி கோணல்களை சரி செய்து வெற்றி பெறும் ஒருவர் இருப்பாரானால் அவர் மஹ்தி மாத்திரமே! என ஹி:1400ல் குமைனி இமாம் மஹ்தி பிறந்த தின கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.





அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்களையும் குற்ற வாளி கூண்டில் ஏற்றி மோசடிகாரர்களாக்கி விட்டு இஸ் லாத்தை குறைப்பாடுள்ள மாரக்கமாக காட்டி விட்டார் இந்த குமைனி.





அத்துடன் தங்களது 12வது இமாமின் மூலம் சஹாபாக் களின் ஜனாஸாக்களை கப்றுகளிலிருந்து எடுத்து கீறி கிழித்து கூறு போடுவதைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த குள்ள நரிகள். ஷீஆ வின் முப்தி ஒருவர் கூறும் போது நாமும் நீங்களும்; (முஸ்லிம்களும்) இன்று ஒரே உம்மத்தாக இருக்கிறோம். இது எதுவரை என்றால் எங்களது இமாம் வாளுடன் வரும் வரை யாகும். அவர் வந்துவிட்டால் (முஸ்லிம் களாகிய) நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்றார். (அல் புர்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சி)





தகிய்யா அல்லது துக்யா:





தங்களுடை ஷீஆ கொள்கையை வெளிக்காட்டாது மறைத்துக் கொண்டு முஸ்லிம்களைக் கண்டால் நாங்களும் உங்களைப் போன்ற முஸ்லிம்கள் தான் எனக் கூறிக் கொண்டு நடிப்பார்கள். நயவஞ்சகத் தனமான இக் கொள்கைக்கு தகிய்யா எனப்படும். தகிய்யா இல்லாதவனுக்கு (ஷீஆ)மார்க்கம் இல்லை என்றார்கள் (நூல்: உசூலுல் காபி. பாகம் 2 பக்கம் 220.)





முத்ஆ (விபச்சாரம்):





தவறான கொள்கையிலும் தவறான செயற்பாட்டிலும் தங்களது மக்களை தக்க வைத்துக் கொள்ள முத்ஆ எனும் விபச்சாரத்தை அனுமதித்துள்ளார்கள். ஒரு பெண்ணை தற்காலிக் திருமணம் எனும் பெயரில் குறிப் பிட்ட காலம் வாடகைக்கு அமர்த்தி இன்பம் அனுபவித்து விட்டு கழற்றி விடுவதை முத்ஆ எனப்படும்.





நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தின் போது அல்லது பத்ஹூ மக்காவின்போது இந்த முத்ஆவை தடை செய்தார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்) ஆனால் வாழ்க்கையில்; ஒரு முறையேனும் முத்ஆ (விபச்சாரத்தை) செய்தாக வேண்டும் என ஷீஆக்கள் ஊக்குவிக்கிறார்கள். இதில் சிறு பெண் பிள்ளைகளை யும் இவர்கள் விட்டு வைக்க வில்லை.





'நமது 12வது இமாமின் மறுபிரவேசத்தை நம்பாதவரும், நாம் கடைப்பிடிக்கும் 'முத்ஆ' தற்காலிக திருமணத் தையும் நம்பாதவரும், நம்மைச் சார்ந்தவரல்ல' என 'அல்ஆமிலி' என்ற ஷீஆ மத அறிஞர் தனது 'வஸாயி லுஸ் ஷீஆ இலா தஹ்ஸீலி மஸாயிஸ் ஷரீஆ' என்ற நூலில் 438 வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.





முத்ஆ செய்தவன் குளிக்கும் போது அவனுடைய உடலிலிருந்து சொட்டுகின்ற ஒவ்வொரு நீர் துளிக்கும் 70 மலக்குகள் பாவமன்னிப்புக் கோருவதுடன் முத்ஆ செய்யாதவனுக்கு மறுமைநாள் வரை சபிக்கிறார்கள்; என்கின்றனர். (நூல்:முன்தஹல் ஆமால்: பாகம் 02 பக்கம் 341)





இந்த சாபத்திற்கு பயந்தும், சல்லாபத்திற்கு ஆசைக் கொண்டும் தான் சிலர் ஷீஆவுக்கு ஆதரவு தெரிவிக் கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.





தனி மனித வழிபாடும் வணக்க வழிமுறைகளும்:





இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள தனி மனித வழிபாடு மற்றும் கப்று வணக்கத்தை ஷீஆக்கள் ஆகுமாக்கினர். குமைனியுடைய கப்ரை புனித கஃபதுல் லாஹ் போன்று கட்டி புனிதப்படுத்தி வணங்கி பூஜிப்பதும் கர்பலா எனும் பகுதியில் ஹூசைன்(ரலி) அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மண்ணை புனிதமாகக் கருதி அந்த மண்ணால் செய்யப்பட்ட உருண்டையின் மீது சுஜூது செய்து தொழுவதும் இவர்களது பிரதான வழிபாடாகும் (இபாதத்தாகும்).





3 வக்துகள் மட்டும் தொழுவார்கள். முஸ்லிம்களுடைய தொழுகைகளை விட வித்தியாசமான அமைப்புடையது. ஸலாம் கொடுக்கும் போது 3 முறை தொடையில் கைகளால் அடித்து அலி (ரலி)க்கு வஹியை கொடுக் காமல் ஜிப்ரீல் மோசடி செய்து விட்டார் என திட்டி அதன் பின் ஸலாம் கொடுப்பர்.





அதான் (பாங்கு) கூறுகின்ற போது அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் எனக் கூறிய பின் அஷ்ஹது அன்ன அலிய்யன் வலியுல்லாஹ் (அலி ஆட் சிக்கு தகுதியானவர் என சாட்சி சொல்கின்றேன்) என அதிகப்படுத்திக் கூறுவார்கள்.





நோன்பு துறக்கின்ற போது நட்சத்திரங்கள் வானில் தோன்ற ஆரம்பிக்கின்ற போது யூதர்களைப் போன்று நோன்பு துறத்தல்.





சுபஹ் தொழுகையில் இரு பெரும் கலீபாக்களைச் சபித்து பிரார்த்னை செய்தல். இதற்கு 'துஆவு ஸனமை குரைஷ்' என்ற பெயர்.





12வது இமாம் வரும் வரை ஜூம்ஆ கடமை இல்லை எனக் கூறி இன்று வரை ஜூம்ஆ தொழுவதில்லை.





ஆஷூராவுடைய தினத்தை துக்க தினமாக பிரகடனப் படுத்தி அன்றைய நாளில் கர்பலாவில் ஒன்று திரள்வது ஹஜ் செய்வதை விட உயர்ந்த கிரியையாக கூறி அந் நாளில் கூரிய ஆயுதங்களாலும் சவுக்கைகளினாலும் தங்களை அடித்து கீறிக்கிழித்துக் கொண்டு இரத்தத்தை ஓட்டி காட்டு மிராண்டித்தனமாக காட்சித் தருவர்.





அஹ்லுல்பைத்:





நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தவர்களான பிள்ளைகள் மகள்மார்கள் மனைவிமார்கள் மருமக்களான சஹாபாக் கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களையே அஹ்லுல் பைத்கள் என முஸ்லிம்கள் ஏற்று கண்ணியம் செலுத்துகின்றனர்.





ஷீஆக்கள் இவர்களை அஹ்லுல்பைத்துகளாக ஏற்க மாட் டோம் என நிராகரித்ததுடன் அலி( ரலி) அவர்களையும் அவர்களது மனைவி பாதிமா (ரலி) மற்றும் அவர்களது பிள்ளைகளான ஹஸன், ஹூசைன் (ரலி) ஆகியோரையும் அவர்களது பரம்பரையில் வந்தவர்களை மட்டுமே அஹ்லுல் பைத்துகளாக ஏற்போம் என கூறுகின்றனர்.





ஷீஆக்களில் பல பிரிவினர் உள்ளனர்





ராபிழாக்கள்.





இமாமிய்யா





இஸ்னா அஷரிய்யா.;





அலவிய்யா





பாதிமிய்யா.





உபைதிய்யா > உபைதிய்யூன்.





ஸைதிய்யாக்கள்.





ஷீஆக்கள் முஸ்லிம்களின் குர்ஆனையும் ஹதீஸையும் புறக்கனித்து விட்டு பின்வரும் நூல்களை அவர்களின் மூலாதார நூள்களாக கொண்டுள்ளனர்.





1- அல் காபி.





2- அல் கைபா.





3- பஸ்லுல் கிதாப்.





4- பிஹாறுல் அன்வார்.





5- மிர்ஆதுல் உகூல்.





6- மபாதீஹுல் ஜினான்.





7- நூறுல் அன்வார்.





8- கஷ்புல் அஸ்ரார்





9- அல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா.





10- அர் ரஜ்ஆ.





11- அல் அன்வாறுன் நுஃமானிய்யா.





12- தஹ்ரீருல் வஸீலா.





13- நஹ்ஜுல் பலாகா





ஜஃபர் சாதிக் பெயரில் மத்ஹபு?





1980ம் ஆண்டுகளில் (ஈரானிய ஷீஆ புரட்சிக்குப்; பின்) இலங்கை நாட்டில் ஷீஆவை ஜஃபர் சாதிக் என்ற பெயரில் 5வது மத்ஹபாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிய போது அன்றிருந்த ஜம்மியதுல் உலமா மற்றும் ஏனைய உலமாக்கள் மனத்துணிவோடு மறுப்பு தெரிவித்ததுடன் ஷீஆவின் சீர்கேடுகளை விளக்கப் படுத்தி துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நூல்கள் வெளியிட்டு முஸ்லிம்களை பாதுகாத்தனர். மர்ஹூம் ருஹூல் ஹக் மவ்லவி அவர்கள் ஷீஆவும் சுன்னாவும் எனும் நூலை மொழிப் பெயர்த்து இலங்கை வாழ் முஸ்லிம்களை விழிப் படையச் செய்தார்கள். இந்நூலை அரபியில் எழுதிய பாகிஸ்தானைச் சேர்ந்த மர்ஹூம் இஹ்ஸான் இலாஹி லஹீர் அவர்களை ஷீஆக்கள் அணுகி வாபஸ் பெறுமாறு கோரினர். உங்கள் புத்தகங்களை நீங்கள் வாபஸ் பெற்றால் எனது நூலை நான் வாபஸ் பெறுகிறேன் என்றார். ஷீஆக்கள் அவரை குண்டு வைத்து கொலை செய்தனர்.





அன்புக்குரியவர்களே! இன்று இலங்கையில் வாழைச் சேனை, அக்குறனை, பொலன்னறுவ, மன்னார், மாபோல, தெஹிவள, கொழும்பு போன்ற பகுதிகளில் ஷீஆக்கள் ஊடுருவி அஹ்லுல் பைத்களின் சிறப்புக்கள் எனும் பெயரில் நோட்டீஸ்கள் வினியோகித்து வருகின்றார்கள். பாதிமா (ரலி) பெயரில் பெண்கள் தினம் கொண்டாடி வருகின்றனர். இவர்களது பித்தலாட்டங்களில் கவனமாக இருந்து ஈமானிய உணர்வுடன் உசாராக இருங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன்.







Recent Posts

Mən İslam dinini əldə ...

Mən İslam dinini əldə etdim, amma İsa Məsihə (əleyhis-salam) və ya Uca Allahın hər hansı bir peyğəmbərinə olan imanımı itirmədim

Мен Исламды дінім ре ...

Мен Исламды дінім ретінде қабылдадым, бірақ Иса Мәсіхке (оған Алланың сәлемі болсын) немесе Ұлы Алланың бірде-бір пайғамбарына деген иманымды жоғалтқан жоқпын

Men Islomni din sifat ...

Men Islomni din sifatida qabul qildim, lekin Iso Masih (unga salom bo'lsin) yoki Olloh taoloning birorta payg'ambariga bo'lgan imonimni yo'qotmadim

வெள்ளிக்கிழமையின் சிற ...

வெள்ளிக்கிழமையின் சிறப்பும், அதன் ஒழுங்குகளும்